Two songs for the occasion.
One, for her and another, composed by her :)
For the love of Khamas... :)
Song: uyirum neeye
Music: A.R. Rahman
Lyrics: Vairamuththu
Singer: Unnikrishnan
Movie: Pavithra
Download
here.
--------------------------------------------------------------------------------
Song: ariyadhoru karu nisiyil
Composition and lyrics: Vijayalakshmi Bhakthavatsalam
Raagam: Ragamalika (Behag, Sindhubhairavi, Chandrakauns, Simhendramadhyamam, Darbari Kanada)
Thaalam: Khanda Chaapu
Lyrics:
பெஹாக்:
அரியதொரு கரு நிசியில் என் மனக்கண்முன்னே
கரியநிற சிறுவன் வந்து பாட்டொன்று கேட்டான்
யாரை நான் பாட? யார் வந்ததென்றேன் ...
பேரைக்கேள் அதுசொல்வேன், கண்ணன் நான் என்றான்!
ஆலிலையில் படுத்துறங்கும் இடையன் நான் என்றான்
மாலும் நான், மாயன் நான் - என்னை பாடென்றான்
சிந்துபைரவி:
முன்னை வினைதீர்க்கும் முதல்வன் அவன் அறிந்தேன்
பின்னை வினை போக்கிடும் பரமன் என்றுணர்ந்தேன்
இடை ஜாதியில் வளர்ந்த வசுதேவன் மகன் அவன்
குடையாக குன்றெடுத்து மழையினின்று குடி காத்தான்
பேய்முலை நஞ்சுண்டு மாயய் தாயை மாய்த்தான்
வேய்ங்குழலில் கானம் செய்து ஆவினம் மெய் மறக்க செய்தான்
சந்திரகௌன்ஸ்:
கன்றெறிந்து கயவனை கண்டழித்த பாலனவன்
காளிங்க நர்தனத்தால் கடியதொரு விஷம் களைந்தான்
வெண்ணையுண்டு மண்ணையுண்டு அன்னையிடம் கட்டுண்டு
உண்ட வாயில் அண்டம் காட்டி அற்புதம் செய்தான்
பல பெண்டிர் துகில் மறைத்து புளகாங்கிதம் அடைந்தான்
ஒரு பெண்ணின் மானம் காக்க துகில் மிகவே கொடுத்தான்
சிம்மேந்திரமத்யமம்:
தூது சென்று தூயவரை துணை நின்று காத்திட்டான்
தீது செய்த தீயவரை தோல்வியை தழுவச்செய்தான்
வேதாந்தம் தனை உரைத்து விஜயனை வெல்லவைத்தான்
விஷ்வரூபம் காட்டி அவனை ஆட்கொண்டான்
அன்றவன் அவனி காக்க ஆயனாய் அவதரித்தான்
தொன்று தொட்டு இருப்பவன் இன்றென்னை பாடச்சொன்னான்
தர்பாரி கானடா:
விளையாட்டு பிள்ளையாய் வினையெல்லாம் களைந்தவன்
வேதாந்தியாய் நின்றான் வாய்மை வெல்ல வழி சொன்னான்
ஆதி அந்தம் இல்லா ஆண்டவன் இவனே
அண்ட சராசரங்களும் ஐம்பூதங்களும் இவனே
யாதுமாகி நின்றவனை நான் பாடினேன்
காலன் என்னை தீண்டும்போது கடுகி வந்து கரை சேர்ப்பான்
என்னை பாடச்சொன்னவன் கடுகி வந்து கரை சேர்ப்பான்
------------------------------------------------------------------------------
Ma and Pa, my music is all yours'.